கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசும் அத்தியாவசிய பொருள்கள் தவிர அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைப் பகுதியில் திறந்து வைத்திருந்த மளிகைக் கடையில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பொருட்கள் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஒரு சிறுவன் உள்பட கடையில் பணிபுரிந்த மூன்று ஊழியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: விற்காத கோழிக் கறி, இரவே டாஸ்மாக்கில் குவிந்த மதுப் பிரியர்கள்!