தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. அரசு விதிமுறைப்படி ஏப்ரல், மே மாதங்களில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.
இதேபோல் சிறிய பள்ளிகள் முதல் பெரிய பள்ளிகள் வரை ஜூன் மாதத்திற்கான கல்விக் கட்டணத்தையும் இப்பொழுதே கட்டவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமியிடம் கேட்டபோது, சில பள்ளிகளில் இதுபோன்ற பிரச்னைகள் இருப்பது தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: இந்தியாவில் ஏழைகளின் அவலநிலை - கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்