ETV Bharat / state

கடனைத் திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Loan
Loan
author img

By

Published : Apr 26, 2021, 12:47 PM IST

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "அரசுப் பள்ளிகள், கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை என்றும், இதனால் இழப்பு ஏற்ப்படுவதாகவும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்ததுடன், இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கும், தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் சட்டப்படி கடனைச் செலுத்தாமல் தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, கடன் பெற்ற தொகையினைப் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம் செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.