சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த சுதா (32), கடந்த வாரம் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், லதா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கலியைப் பறித்து கொண்டு, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதைத் தொடந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கார்த்திக் என்கிற டாங்கி கார்த்திக் (24) மற்றும் மதன் கார்த்திக் (24) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கொள்ளையர்கள் இருவரயும் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றவாளிகள் மதுரையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை காவல் துறையினர், கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிகளிடமிருந்து ஐந்து சவரன் தாலிச் சங்களியைப் பறிமுதல் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது, கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த சேலையூர் காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி