தர்மபுரி: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருதுபாண்டி என்பவருக்கு தர்மபுரி மகளிர் நீதிமன்றம் போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மருதுபாண்டி தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்தார். விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக மருதுபாண்டியுடன் தான் வாழ்ந்துவருவதாகவும், தாங்கள் அமைதியாக வாழ்க்கையைத் தொடரும் வகையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போக்சோ சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகள், அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாகவே கருதப்படும் எனவும், விசாரணை நீதிமன்றத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமி, மேஜரான பின், சமரசம் செய்துகொண்டதாகத் தெரிவித்தாலும், அதை ஏற்க முடியாது எனக் கூறி, மருதுபாண்டியின் தண்டனையை உறுதிசெய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!