ETV Bharat / state

சென்னை மின்சார ரயிலில் ஏ.சி பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே திட்டம்!

Southern Railway: சென்னை புறநகர் மின்சார ரயிலில் 2 முதல் 3 ஏசி பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

chennai electric train
சென்னை புறநகர் மின்சார ரயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 9:07 AM IST

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், நாள்தோறும் 630க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளன. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் வசதிக்கு ஏ.சி ரயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் மின்சார ரயில்களில் 2 முதல் 3 ஏ.சி பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்கி பார்க்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது. அடுத்த 6 மாதத்தில் இதற்கான சோதனை ஓட்ட நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏ.சி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி வசதி கொண்ட மின்சார ரயில் பெட்டிகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் பட்சத்தில், அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட நபர் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.