கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரசு நாடான அபுதாபியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த ஒரு தொழில் அதிபாின் குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவால் சிகிச்சை முடிந்த பின்பும் அவர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் சென்னையிலேயே தவித்துவந்தனர்.
21 நாள்கள் ஊரடங்கு முடிவடைந்த பின்பு நாடு திரும்பலாம் என்று எண்ணிய அவர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அபுதாபி அரசாங்கத்திடம் தங்களை மீட்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையடுத்து, இந்தியாவிற்கான அபுதாபி நாட்டின் தூதரகம் அவர்கள் மீண்டும் அபுதாபி செல்வதற்கான அனுமதியை பெற்றுத்தந்தது.
பின்னர், அவர்களது குடியுரிமை, சுங்கச் சோதனை, மருத்துவப் பரிசோதனைகள் முடிந்தவுடன் ஏர் ஆம்புலன்ஸ் தனி விமானம் மூலம் அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விமானத்தில், தொழில் அதிபர் குடும்பத்தினா் 3 பேர்,விமானிகள், பொறியாளர்கள்,உதவியாளர்கள் 5 போ் என மொத்தம் 8 பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை: தனி விமானம் மூலம் கர்நாடகா அழைத்து வருகை