சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு நாளான நேற்று(மே 31) தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்தி கரோனா காலத்தில், புகையிலைப் பொருட்கள் மீது முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
15 பள்ளிகளில் நிக்கோட்டின் இல்லாமல் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். புகையிலைக்கு எதிராக உள்ளவர்கள், உலக புகையிலை எதிர்ப்பு நாள் போட்டியாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புகையிலைத் தொடர்பான சந்தேகங்களுக்கு புகையிலை கண்காணிப்புக்குழுவினர் திறம்பட பதிலளித்தனர். மேலும் புகையிலை விளம்பரங்கள் அதன் ஸ்பான்சர்கள் குறித்த நுண்ணுணர்வுகளையும் தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
"கரோனா காலத்திற்குப் பிறகு புகையிலைப் பொருட்கள் விற்பவர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும். உரிமம் பெற்ற கடைகள் மட்டுமே புகையிலைப் பொருட்களை விற்க முடியும் எனவும் புகையிலைப் பொருட்களைக் கடத்தினாலோ அல்லது 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்றாலோ குண்டர் சட்டத்தின் மூலம் அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிறில் அலெக்சாண்டர் கூறினார்.
இதையும் படிங்க:உலக புகையிலை எதிர்ப்பு நாள் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்பக்கலைஞர்!