ETV Bharat / state

மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக 'டிமிக்கி' தந்த நபர் - சென்னை விமான நிலையத்தில் கைது!

மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக தஞ்சாவூர், ஹைதராபாத் போலீசாரால் தேடப்பட்டு வந்த தெலங்கானா மாநில தொழிலதிபர் கத்தார் நாட்டுக்கு விமானத்தில் தப்பிச்செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு உள்ளார்.

absconding-telangana-business-man-arrested-in-chennai-airport
மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக ’டிமிக்கி’ தந்த நபர் - சென்னை விமான நிலையத்தில் “லபக்”
author img

By

Published : Jul 3, 2023, 1:42 PM IST

Updated : Jul 3, 2023, 1:53 PM IST

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (55). தொழிலதிபரான இவர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் காஜா மொய்தீன் மீது மோசடி வழக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஹைதராபாத் மற்றும் தஞ்சாவூர் போலீசார், காஜா மொய்தீனை கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடி வந்தனர்.

ஆனால், காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதை அடுத்து தஞ்சாவூர் மற்றும் ஹைதராபாத் போலீசார் காஜா மொய்தீனை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி எச்சரிக்கை ஒட்டப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமரின் வீடு மீது ஆளில்லா விமானம் பறந்தது - விசாரணையை துவக்கியது போலீஸ்!

இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்து பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்துக்கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க: குற்றாலத்தில் குளிக்கத் தடை - ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்..!

அப்போது தஞ்சாவூர் மற்றும் ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் காஜா மொய்தீன் இந்த விமானத்தில் கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களைக் குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது இவர் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளி என்றும், இவரை தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

இதை அடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வெளியில் விடாமல் தடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து தொழிலதிபர் காஜா மொய்தீனை அடைத்து வைத்துள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. மேலும் குடியுரிமை அதிகாரிகள் தஞ்சாவூர், ஹைதராபாத் போலீசுக்கும் தகவல் கொடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்த விவகாரம் - முதல்முறையாக மனம் திறந்த முதலமைச்சர்

Last Updated : Jul 3, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.