அகில இந்திய பொறியியல் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறந்த ஆசிரியராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் விளங்கிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
