ETV Bharat / state

"விஜயகாந்தை தமிழகமே தலைவனாக ஏற்றுக்கொண்டது" - அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் உருக்கம்! - அறிவியல் ஆலோசகர்

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மறைந்த அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Ponraj Vellaichamy speech about Captain Vijayakanth
கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அஞ்சலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 2:55 PM IST

விஜயகாந்துக்கு அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நேரில் சந்தித்து அஞ்சலி

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் டிச.28ம் தேதி காலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி பேசுகையில், "கேப்டன் விஜயகாந்தை முதன்முதலாக நான் சந்தித்தது, ராஜ்பதிபவனில் அப்துல்கலாம் 11வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தென்னிய நடிகர் சங்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு அப்துல்கலாமை சந்திக்க வந்திருந்தார். அப்போது அப்துல்கலாம் விஜயகாந்துக்கு கிராமபுர தற்சார்பை எப்படி எய்துவது, புறா திட்டத்தை சினிமாவின் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்லுமாறும், அந்த புறா திட்டத்தை பற்றி விளக்கிக் கூறுமாறு தெரிவித்தார்.

அது தான் எங்களது முதல் சந்திப்பு. அடுத்து 2வது சந்திப்பு, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நிற்கப்போவதற்கு முன்பாக கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் சந்தித்தேன். விஜயகாந்த் திரையுலகத்தினுடைய பசியை ஆற்றியவர் என எல்லோரும் சொல்லுவார்கள். அன்று 3 மணி நேரம் விவாதித்துவிட்டு, நான் கிளம்புகிறேன் எனக் கூறியபோது, என்னோடு மதிய உணவு அருந்திவிட்டு தான் செல்ல வேண்டும் என இருக்க வைத்தார்.

ஒரு நாள் முழுவதும் அவர் பேசிய வார்த்தை திரையுலகில் மட்டும் நடித்தவர் அல்ல; ஏழை எளிய மக்களைப் பற்றி, பாட்டாளி மக்களைப் பற்றி பொதுவுடமை சித்தாந்தத்தைப் பற்றி சிந்திக்கக் கூடிய அற்புதமான மனிதர் என்றும், அவரது எளிமையான உள்ளத்தை, நேர்மையை, எதையும் எதிர்த்து போராட வேண்டும் என்ற வீரத்தை, விவேகத்தை புரிந்துகொண்டேன். அன்றிலிருந்தே விஜயகாந்துடன் எனக்கு நெருங்கிய பழக்கம்.

அப்படி நேர்மையாக இருக்கக் கூடிய ஒரு மனிதன் அரசியலுக்கு வந்தால், சாதிக்க முடியும் என நிரூபித்தவர் விஜயகாந்த். எதிர் கட்சி தலைவராக உயர்ந்து, இந்த நாட்டிலே ஒரு மாற்று சக்திக்கு இடம் இருக்கிறது என்று நிரூபித்தவர். தலைவர் என்று சொன்னால் அவரவருக்கு ஒரு தொகுதி இருக்கும். அதில் தான் அவர்கள் போட்டியிடுவார்கள், ஆனால் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவன் என்றால், எந்த தொகுதியிலும் போட்டியிடலாம்.

மதுரையில் இருந்து வந்தவர், விருதாச்சலத்திலே போட்டியிட்டு வெற்றி பெற்று, எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவராக அவர் பரிணமித்தார். துரதிஷ்டவசமாக உடல் நலிவுற்றார், இன்று கேப்டன் நம்மிடம் இல்லை.

ஆனால் அவரது சித்தாந்தம், அன்பு இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் எழுந்து கண்ணீர் சிந்துகிறது என்றால் இதுதான் அவர் சரித்திரமாக வாழ்ந்ததற்கு சான்று. திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவரது அன்பு பாதித்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், தமிழக மக்களுக்கும், தேமுதிகாவிற்கு ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கேப்டனை முதல்வராக ஏற்றுக்கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டது' - ஜி.கே.வாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.