ETV Bharat / state

ஆவின் பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை தொடக்கம்! - பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகள்

சென்னை : பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

ஆவின் இனிப்பு வகைகள்
ஆவின் இனிப்பு வகைகள்
author img

By

Published : Oct 22, 2020, 9:31 PM IST

தரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பால், பால் பொருள்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் முதலான பால் பொருட்களையும் உரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருள்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளிப் பண்டிகைகளை முன்னிட்டு கீழ்கண்ட ஐந்து வகையான சிறப்பு இனிப்புகளை அக்டோபர் 23ஆம் தேதி முதல் விற்பனையை செய்ய உள்ளது. அவை பின்வருமாறு,

1) ஸ்டப்டு டிரை ஜாமுன் (250 கி) - 190 ரூபாய்

2) நட்டி மில்க் கேக் (250 கி) - 190 ரூபாய்

3) ஸ்டப்டு மோதி பாக் (250 கி) - 190 ரூபாய்

4) காஜு பிஸ்தா ரோல் (250 கி) - 225 ரூபாய்

5) பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) - 165 ரூபாய்

6) மேற்கண்ட ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (500 கி) - 375 ரூபாய்.

இவை அனைத்தும் முதன்முறையாக உயர்தர சமையல் வல்லுநர் விஜய் டேனி அவருடைய குழுவினர்களைக் கொண்டு சுகாதாரமான முறையில், தரமான ஆவின் நெய்யைப் பயன்படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.