ETV Bharat / state

'ஸ்விகி மூலமாகவும் ஆவின் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்'- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு! - aavin online products

சென்னை: சொமெட்டோ, டுன்சோ மூலம் பொதுமக்கள் ஆவின் பால், பால் உபபொருள்களைப் பெற முடிந்தநிலையில், தற்போது ஸ்விகி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Aavin  ஆவின் சேவைகள்  ஆவின் பால் பொருள்கள்  ஆவின் அறிவிப்பு  சென்னை செய்திகள்  தமிழ்நாடு அரசு அறிவிப்பு  aavin products online  aavin online products  aavin announcement
'ஸ்விகி மூலமாகவும் ஆவின் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்'- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
author img

By

Published : May 1, 2020, 10:58 AM IST

கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆவின் என்னும் வணிகப் பெயர் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனம் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 31.50 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல்செய்து, 24.50 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறது.

வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமண பால், ஐஸ் கிரீம் போன்ற பால் உப பொருள்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்களில் மூலம் விற்பனை செய்துவருகிறது. இதில், 21 பாலகங்கள் குளிர்சாதன வசதி, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, வை-பை வசதி போன்ற வசதிகளுடன் அதிநவீன பாலகங்களாக (Hi tech Parlor) இயங்கிவருகின்றன.

தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிநவீன பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு பால், பால் உபபொருள்கள் விநியோகம் செய்வதற்காக சொமெட்டோ, டுன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு அதை சென்னையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதர மாவட்ட ஒன்றியங்களிலும் மேற்கண்ட சேவையினை விரைவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளது.

மேலும், இந்தச் சேவையின் மூலமாக ஆவின் பால், பால் பொருள்கள் சிரமமின்றி கிடைப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சேவையின் மூலமாக தினமும் 7 முதல் 8 லட்சம் ரூபாய்வரை விற்பனை நடைபெற்றுவருகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஆவின் தற்போது ஸ்விகியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படியில் ஆவின் பால், பால் பொருள்கள் நுகர்வோர் இல்லங்களுக்கு சொமெட்டோ, டுன்சோ, ஸ்விகி நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.

இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குநரும் இந்திய ஆட்சிப் பணியாளருமான முனைவர் வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்:

  • தற்போது உள்ள ஊரடங்கிலும் ஆவின் மூலமாக புதியதாக 101 புதிய சங்கங்கள் நிறுவியுள்ளோம் 76 செயலிழந்த சங்கங்களைப் புதுப்பித்துள்ளோம்.
  • 378 தற்காலிக பால் கொள்முதல் நிலையங்கள் நிறுவியுள்ளோம்.
  • விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, சில தனியார் பால் கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் 12,767 விவசாயிகளின் பாலினை ஆவின் மூலமாக கொள்முதல்செய்ய அவர்களை ஆவினுடன் இணைத்துள்ளோம்
  • சுமார் 9,943 எம்.டி. கால்நடைத் தீவனத்தை பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வழங்கியுள்ளோம்.
  • சுமார் 206 ஆவின் சார்ந்த கால்நடை மருத்துவர்கள் விவசாயிகளின் இல்லத்திற்கே சென்று நேரடியாக கால்நடைகளுக்கு மிகச் சிறப்பான முறையில் மருத்துவச் சிகிச்சை வழங்கிவருகின்றனர். ஆவின் மூலம் கால்நடைகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 599 செயற்கை முறை கருவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் 34621 கன்றுகள் பிறந்துள்ளன.
  • எனவே தற்போது நாளொன்றுக்கு சுமார் 4.00 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.
  • விற்பனை பிரிவு மூலமாக முகவர்கள் நியமனத்தொகை ரூ.10,000 லிருந்து ரூ.1000ஆக குறைத்ததன் அடிப்படையில் தற்போது 326 சில்லறை விற்பனையாளர்களை ஆவின் முகவர்களாக தமிழ்நாடு முழுவதும் நியமனம்செய்து அவர்கள் மூலமாக ஆவின் சார்ந்த பால் மற்றும் பால் உபபொருள்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்துவருகிறோம். மேலும் அனைத்து சிறு வியாபாரிகளை அணுகி ஆவின் முகவர்களாக நியமிக்க முழு முயற்சி செய்துவருகிறோம்.
  • நுகர்வோர் குறைகளை உடனுக்குடன் சரி செய்து வருவதால் நுகர்வோருடைய நன்மதிப்பையும் பெற்றுள்ளோம்.
  • மேலும், தற்பொழுது ஊரடங்கு நிலவிவரும் நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பால், பால் உபபொருள்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் பொது மக்கள் ஸ்விகி மூலமாகவும் நேரடியாக பால், பால் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர் வட்டி தள்ளுபடி சலுகை : செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.