ETV Bharat / state

"ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைத்திடுக" - நிர்வாகம்

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கி, வணிக ரீதியாக விற்பதைத் தடுப்பதற்காக, ஆவின் மாதாந்திர அட்டையுடன் குடும்ப அட்டையை சரிபார்க்கவும், இணைக்கவும் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Aavin
Aavin
author img

By

Published : Nov 23, 2022, 5:04 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், தினமும் 40 லட்சம் லிட்டருக்கும் மேல் பாலை கொள்முதல் செய்து, அதனை கொழுப்புச்சத்து அடிப்படையில் பிரித்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

அண்மையில் ஆவின்பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கும், சிவப்பு நிறப் பால் பாக்கெட்டின் விலை 60 ரூபாயிலிருந்து 76 ரூபாய்க்கும் உயர்த்தப்பட்டது. அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டைப் பொறுத்தவரை, தினசரி சுமார் 6 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒரு லட்சம் லிட்டர் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வுக்குப் பிறகு, மாதாந்திர அட்டைதாரர்கள் இணைப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி, வணிக ரீதியாக விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை வாங்கி, வணிக ரீதியாக விற்பதைத் தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் குடும்ப அட்டையை சரிபார்க்கவும், இணைக்கவும் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், "மாதாந்திர அட்டைதாரர்களை மாதாந்தோறும் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாதாந்திர அட்டையை குடும்ப அட்டையுடன் சரிபார்த்து, புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தப்பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக குடும்ப அட்டையை ஆவின் மாதாந்திர அட்டையுடன் சரிபார்த்தல், புதுப்பித்தல், இணைத்தல் பணி நடைபெறுகிறது. இதன் மூலம், முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க முடியும். மாதாந்திர அட்டைதாரர்களுக்கான சலுகையை மற்றவர்கள் வணிக நோக்கில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கேக் தயாரிப்பில் இறங்கும் "ஆவின்" - கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.