சென்னை தங்கசாலை அரசு அச்சகம் அருகே ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஏ.என். வசிகரன் தலைமையில் ஊழலை ஒழிக்க துடைப்பம் யாத்திரை துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
ஊழலை ஒழிக்கவும், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம், துடைப்பத்தை வைத்து வீட்டை சுத்தம் செய்யவதைப்போல நாட்டையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யாத்திரை துவங்குவதாக மாநிலத் தலைவர் வசீகரன் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி யாத்திரை நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மின் மாற்றியை சரிசெய்ய சென்ற ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!