பொதுவாக ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ் மக்களின் இல்லங்கள் தெய்வீக மணத்தால் நிரம்பித் திளைக்கும். ஆடி 1, ஆடி வெள்ளி, ஆடி 18 என தொடர் கொண்டாட்டங்களுடனும் பக்தி மனத்துடனும் மக்கள் வளைய வருவர். அந்த வகையில் இன்றைய ஆடி கிருத்திகையும் மிக விசேஷமான நாளாகும்.
சேயோன் முருகனை வளர்த்த நிதார்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா எனும் கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் ஆசிர்வதித்த சிவபெருமான், அவர்களது நட்சத்திரமான கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்களும் பிணிகளும் தீர்ந்து சகல செல்வங்களையும் பெறுவர் என ஆசிர்வதித்தார்.
அது முதல் கந்தன் முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகைகளில் விரதமிருந்து நெக்குருகி முருகபக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக ஆடி மாதம் வரும் இன்றைய கிருத்திகை மிக சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் அறுபடை வீடுகளிலும்கூட மக்கள் சென்று வழிபாடு செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
ஆகவே, மன உளைச்சலில் திளைப்பவர்கள், இன்னல்களை சந்தித்து வருபவர்கள், வேலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களால் மனக் கஷ்டத்தில் ஆழ்ந்திருப்பவர்கள், கவலை சஞ்சலங்களால் சூழ்ந்திருப்பவர்கள் என அனைவரும் வீட்டிலிருந்தபடியே முருகப் பெருமானை மனமுருகி வேண்டி, பாராயணம் செய்தும், விரதமிருந்தும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்புடன் வாழ ஈ டிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.
இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2