ETV Bharat / state

சைடிஷ் சாப்பிட்டதால் இளைஞர் வெட்டி கொலை.. கொலையாளி கைது.. - Rayapet Govt Hospital

சென்னை, அண்ணா சாலை அருகே, மது அருந்துவதற்காக வைத்திருந்த பீப் சைட்டீஸை பிடுங்கி சாப்பிட்டதால் ஆத்திரத்தில் மாடு வெட்டும் கத்தியால் பீகார் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சைட்டீஸை சாப்பிட்டதற்காக பீகார் இளைஞர் வெட்டி கொலை

author img

By

Published : May 24, 2023, 2:49 PM IST

சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அசார். சென்னை அண்ணா சாலை அருகே உள்ள பார்டர் தோட்டம் பகுதியில் உள்ள வெங்கடேசன் தெருவில் எம். எஸ் சிக்கன் கடையில் வேலை செய்து வந்து உள்ளார். நேற்று இரவு நைனியப்பன் தெரு புர்ரா சாஹிப் தெருவின் சந்திப்பில் கழுத்து மற்றும் மார்பில் ரத்த காயங்களுடன் முகமது அசார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அவரது சகோதரர் முகமது கலாமின் உதவியோடு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது முகமது ஆசாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை போலீசார் முகமது அசாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட முகமது அசாரின் சகோதரர் முகமது கலாமிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் முகமது அசார் சார்மினார் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்து உள்ளார். அதே கடையில் வேலை பார்த்த குட்டு என்ற நபருடன் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மோதலில் ஈடுபட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆகவே இந்த சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த விஜய், பப்பு குமார், மெஹபூப் ஆலம், இஸ்லாம் கான் ஆகிய நான்கு பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி குட்டு என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பீகார் மாநிலத்திற்கு தப்பிவிடலாம் என ரயிலில் சென்று உள்ளார்.

அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் குட்டு என்கிற முகமது அலி ஹுசைன் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். பின், போலீசார் குட்டுவிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையில் பயில்வான் என்கிற அசாருக்கும், குட்டு என்கிற முகமது அலி என்பவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாகவும்,

நேற்று இரவு நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது பீப் சைட்டீஸ் வாங்கி வைத்ததாகவும், சைட்டீஸ் அனைத்தையும் பயில்வான் சாப்பிட்டு விட்டதாகவும், இதனை குட்டு கேட்டதற்கு அப்படித்தான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் எனவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குட்டு அருகில் இருந்த மாடு வெட்டும் கத்தியை வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ஓட ஓட வெட்டி படுகொலை.. செங்கல்பட்டு அருகே நடந்த பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.