ETV Bharat / state

காதலியைப் பிரிய நேரிட்டதால் இளைஞர் எடுத்த விபரீத முயற்சி - காதலியை பிரிய நேரிட்டதால்

சென்னையில் காதலியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிய நேரிட்டதால், கடலுக்குள் சென்று தற்கொலைக்கு முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த இளைஞரைக் காவல் மீட்புக் குழுவினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காதலியை பிரிய நேரிட்டதால் : வாலிபர் தற்கொலை முயற்சி

author img

By

Published : Dec 22, 2021, 8:13 AM IST

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் காவல் மீட்புக் குழுவினர் நேற்று (டிசம்பர் 21) பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குப் பேசிக்கொண்டிருந்த நபர்களில் ஒரு இளைஞர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றதால் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கத்திக் கூச்சலிட்டனர்.

அப்போது, பொதுமக்களின் கூச்சலைக் கேட்டு அங்குப் பணியிலிருந்த பெசன்ட் நகர் காவல் மீட்புக் குழு காவலர்கள் சபின், ராஜா ஆகியோர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு கரைக்கு அழைத்துவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

அதன்பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ரேலங்கி பணீந்திர குமார் (30) என்பதும், அவர் சென்னையில் வேலைசெய்யும் பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், தனது காதலியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிய நேரிட்டதால் ரேலங்கி பணீந்திர குமார் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற அவரை காவலர்கள் காவல் நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை வேண்டாம்
தற்கொலை வேண்டாம்

இந்நிலையில், கடலுக்குள் நீந்திச் சென்று இளைஞரின் தற்கொலை முயற்சியைத் தடுத்து அவரின் உயிரைக் காப்பாற்றிய காவலர்களைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்ட ஜூலி; குதூகலத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.