சென்னை: தாம்பரத்தைச்சேர்ந்த விக்னேஷ், சுசீந்தர்பாலாஜி, கேபா ஆகியோர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் இன்று மூன்று மட்டன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர்.
இதில் ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி மூவரும் கடை ஊழியர்களிடம் புகார் அளிக்கவே கத்திரிக்காயில் இருந்து வந்திருக்கும், புழுவை எடுத்துப்போட்டு விட்டுச்சாப்பிடுமாறு அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
அதற்குள்ளாக அங்கு சாப்பிட வந்த மற்றவர்களுக்கு பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரியவரவே அவர்களும் சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டனர். இந்த பிரச்னைக்கு நடுவிலும் பிரியாணிகளை பார்சல் கட்டி, அமோக விற்பனை செய்து கொண்டிருந்தனர், கடை ஊழியர்கள்.
வாடிக்கையாளர்களின் நலனைக்கருத்தில் கொள்ளாமல் லாப நோக்கத்தோடு புழு இருப்பது தெரிந்தும் பிரியாணியை விற்பனை செய்த சம்பவம், பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உணவுப்பாதுகாப்புத்துறையினர் இந்த உணவகத்தில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறப்பாகப்பணியாற்றிய 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்புப்பதக்கங்கள் அறிவிப்பு