சென்னை: அடுத்து நொளம்பூர் பகுதியை சேர்ந்த சம்பக் (33), சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வந்தார். இவர் தி நகரைச் சேர்ந்த 33 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் சானிடைசர் மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மாஜிஸ்திரேட் மற்றும் காவல் துறையினர் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதில் சம்பக் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்ததையடுத்து போரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தற்கொலைக்கு தூண்டியதாக சம்பக்கை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:‘தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது’ - முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்