ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து... கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி!

சென்னை அடையாறு எல்.பி. சாலையில் கலவை லாரி மோதியதில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

accident
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து
author img

By

Published : Aug 2, 2023, 3:58 PM IST

சென்னை: சென்னை அடையாறு எல்.பி. சாலையில் இன்று (ஆகஸ்ட் 2) காலை 8.30 மணியளவில் கலவை லாரி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில், லாரி மோதியதால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண்ணின் தலை மீது கலவை லாரி ஏறியதால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் விபத்தில் சிக்கி பலியான பெண் தரமணி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த ஹேமலதா(23) என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் கடந்த சில வருடத்திற்கு முன்பு ஹேமலதா, சாஃப்ட்வேர் இன்ஜினியரான ரகு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஹேமலதா, தற்போது கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளநிலை பி.பி.ஏ படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை தாயார் வீட்டிற்கு தனது கணவர் ரகுவுடன் இருசக்கர வாகனத்தில் ஹேமலதா வந்தபோது கலவை லாரி பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயங்களுடன் ரகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் பீகாரை சேர்ந்த ஆசாத்(45) என்பவரை கைது செய்து, அவர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் அரங்கேறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இறந்த மனைவியை கட்டிப்பிடித்து, கணவன் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்தது. இந்த விபத்தினால் அடையாறு, கிண்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதையும் படிங்க:காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு விவகாரம் குறித்து ஓபிஎஸ் பேச்சு: கே.பி.முனுசாமி தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.