ETV Bharat / state

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் - சிஆர்பிஎப் வீரர்களின் வரலாற்றை நினைவுகூரும் பாடல் வெளியீடு

சென்னை: புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிஆர்பிஎப்
சிஆர்பிஎப்
author img

By

Published : Feb 15, 2020, 3:57 PM IST

ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி தளத்தில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முக்கியம்சமாக மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், பாடல் இயற்றப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் மத்தியில் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி.பி. சோனல் வி.மிஸ்ரா பங்கேற்று மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் குடும்பத்தினர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஐ.ஜி.பி. சோனல் வி.மிஸ்ரா பேசுகையில், " இதுவரை தாய்நாட்டிற்காக 2 ஆயிரத்து 149 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழர்களின் குடும்பத்திலிருந்து காந்திமதி, கிருஷ்ணவேணி ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதுபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வீரர்களின் குடும்பத்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி

மத்திய ரிசர்வ் காவல் துறை படையில் ஒருவர் சேர்ந்ததால், அவர்களுடைய குடும்பம் நம்முடைய குடும்பம். இம்முறை உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் சொந்த ஊருக்குச் சென்று, அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் வீரர்களின் புகைப்படம், பயோடேட்டா ஆகியவற்றை மாணவர்களுக்கு காட்சிப்படுத்துவோம்" என்றார். அப்போது மத்திய ரிசர்வ் காவல் துறையினரின் உயிர்த்தாகத்தைப் போற்றும் வகையில் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.