ETV Bharat / state

பிளம்பர் போல நடித்து மூதாட்டி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை - வீட்டின் கதவை சரி செய்வது போல் நடித்து திருட்டு

சென்னை மாம்பலத்தில் பிலம்பர் போல நடித்து மூதாட்டி வீட்டில் 40 சவரன் நகையை திருடி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

அலாக்காக மூதாட்டி வீட்டில் 40 சவரன் நகையை ஆட்டைய போட்ட திருடன்!

author img

By

Published : Feb 18, 2023, 3:43 PM IST

சென்னை மேற்கு மாம்பலம் ராஜீவ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி(66). இவர்களது மகள் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் சொந்த வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாஷிங் மெஷின் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய ஆட்களை அழைத்து வருவதற்காக நேற்று (பிப்.17) வெங்கடேசன் வெளியே சென்றுள்ளார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பத்மாவதியிடம் தான் பிளம்பர் என்றும், சமையலறையில் உள்ள குழாயை சரிசெய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பத்மாவதி குழாய் சரியாக இருக்கிறது, வாஷிங் மெஷின் சரிசெய்ய வேண்டும் என்று வீட்டினுள் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், அந்த நபர் வீட்டில் குழாய் மற்றும் வாஷிங் மெஷினை பார்த்து விட்டு இதற்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது என கூறியதுடன் உங்க வீட்டு கதவு கூட சரியாக இல்லை என்று தெரிவிக்கவே உடனே பத்மாவதி அனைத்து கதவுகளையும் சரிபார்க்கும்படி சொல்லியுள்ளார்.

அதன் பின்னர், அந்த நபர் ஹால் கதவை சரி செய்து விட்டு படுக்கையறை கதவை சரிசெய்ய சென்றபோது பத்மாவதி ஹாலில் அமரந்திருந்தார். வேலை முடிந்து அந்த நபர் பணத்தை பெற்று கொண்டு சென்ற பின்னர், இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் பத்மாவதி, நீங்கள் அனுப்பிய நபர் வந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நான் யாரையும் அனுப்பவில்லை என்று கூறிவிட்டு பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 40 சவரன் மதிப்புள்ள 15 தங்க வளைகள் திருடுபோனது தெரியவந்தது. வீட்டிற்கு பிளம்பிங் செய்ய வந்த அடையாளம் தெரியாத நபர் பத்மாவதியை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதை அறிந்த வெங்கடேசன் இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பில் திமுக, நாதக இடையே மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.