ETV Bharat / state

போலீஸ் எனக்கூறி மாணவியிடம் வழிப்பறி!

பூந்தமல்லி அருகே மர்மநபர் ஒருவர் போலீஸ் எனக் கூறி, மருத்துவ கல்லூரி மாணவியிடம் 4 சவரன் நகைகளை பறித்துச் சென்றுள்ளார்.

thief
thief
author img

By

Published : Sep 18, 2022, 9:01 PM IST

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கிருஸ்டல் டார்லியா(23) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி, நேற்று(செப்.17) தனது உறவினரான ஜிஜோ(21) என்பவருடன் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை அருகே நின்று பேசி கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் தன்னை போலீஸ் எனக் கூறி, இங்கு நின்று பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். பிறகு ஜிஜோவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று தூரமாக நிற்க வைத்துவிட்டு, மீண்டும் டார்லியாவிடம் வந்துள்ளார்.

அணிந்திருக்கும் நகையை கழற்றி வைத்து கொள்ள வேண்டும் என்றும், சப் இன்ஸ்பெக்டர் வந்தால் பறித்துக் கொள்வார் என்றும் கூறியதையடுத்து, பயந்து போன அந்தப் பெண் தான் அணிந்திருந்த வளையல், கம்மல், செயின் என 4 பவுன் நகைகளைக் கழற்றி கையில் வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் நான்கு பவுன் நகைகளையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.