சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை மிண்ட் சந்திப்பில் உள்ள மூன்று மாடி கொண்ட கட்டடத்தின் முதலாவது மாடியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கில் இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென கரும்புகை கிளம்பியது. அதன்பின் தீப்பிடித்துள்ளது.
உடனே வங்கியில் பாதுகாப்பில் பணியிருந்த ஏழுமலை தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டையில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீயானது மளமளவென பரவியது. சுமார் 1 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வங்கியிலிருந்த 4 கணினிகள், பாஸ்புக், செக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின. இந்த தீவிபத்து தொடர்பாக பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவு காரணமாக வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் வீட்டில் ரூ.7 லட்சம் பறிமுதல்