ETV Bharat / state

பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைப்பு!

Vijayakanth Condolences: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று(டிச.28) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் நாளை (டிச.29) காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Vijayakanth
விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைப்பு..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:23 PM IST

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார் என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (டிச.29) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுகிறது.

கேப்டனின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் மறைவு; கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான நட்சத்திரங்களின் உருக்கமான பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.