சென்னை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலை ஓரம் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் ஏற்றிச்செல்லும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். அதிவேகமாக வந்ததால் கட்டுபாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதினார்.
மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்தது. மேலும் பேருந்தும் எரியத்தொடங்கியது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது தாம்பரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மிரட்டல்