சென்னை: பக்கிங்கம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றில் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு ஆற்று நீரில் பாய்ந்து நெட்டுக்குப்பம் ,எண்ணூர் குப்பம், தாழக்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு என்பது எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது எண்ணூர் பகுதி சுற்றுவட்டாரத்திலும் பரவி இருந்தது.
குறிப்பாக பக்கிங்கம் கல்வாயில் இந்த எண்ணெய் கழிவு கலந்திருந்ததாலும் ,மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினாலும் கால்வாய் வழியாக செல்லக்கூடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது.இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது பக்கிங்கம் கல்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் இந்த எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன இதில் சத்தியமூர்த்தி நகர் ,கார்கில் நகர் ,பாரதி நகர் என சுமார் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் இந்த எண்ணெய் கழிவு எண்ணெய் படலமாக சூழ்ந்தது.இதையடுத்து எண்ணெய் படலம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. மேலும் எண்ணெய் கழிவுகள் பரவி உள்ளது ,பாதிப்புகள் ,இதனால் அந்தந்த பகுதியில் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பல கோணங்களில் மாநில குழு ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சுழல் அறிவோம் என தனியார் அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓர் ஆய்வு நடத்தியது. அதில், இந்த எண்ணூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் பறவைகள் மீன்கள், அலையாத்தி காடுகள் மற்றும் கடல்வாழுயரினங்கள் என உள்ளன. இது முற்றிலும் பாதிக்கபட்டு வருகிறது. இது அங்கு இருக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கும் நிலை தற்போது வரை உள்ளது. மேலும், இந்த இந்த எண்ணெய் கழிவுகள் தற்போது, திருவொற்றியூர் வரை இந்த எண்ணெய் தடங்கள் தற்பொது காணபட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இந்த எண்ணெய் கழிவுகள், பெசண்ட் நகர், நீலாங்கரை, கோவலம், மாமல்லபுரம், கல்பாக்கம் வரை பரவும் அபயாம் உள்ளது. குறிப்பாக 2017-ஆம் ஆண்டும் எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால், இது பாதிப்பு கோவலம் வரை இருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் இது வேகமாக பரவும் நிலை ஏற்படும். மேலும் இது நீரில் கலந்தால், அதை அப்புறபடுத்தவதில் சவலால்கள் நிறைந்த செயலாக இருக்ககூடும் என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். விதிமீறல்களில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும், தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படர தொடங்கி உள்ளது என சமூக ஆர்வளர்கள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா எக்ஸ் பக்கத்தில் அளித்த விளக்கம், " இந்நிகழ்வு டிசம்பர் 7-ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றும் பணி 11-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. 12-ஆம் தேதி அன்று அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
பல்லுயிரினங்களுக்கு ஆபத்தா?:- எண்ணூர் பகுதியில் படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகளால் தொடர்ந்து அங்கு இருக்கும் தாவரங்கள், மீன்கள், இறால்கள், நண்டுகள், உள்ளிட்டவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் எண்ணூர் முகதுவராத்தில் இறால்களின் இனப்பெருக்கம் செய்யும் காலம் இது இதனால் இந்த இறால் மிகவும் பாதிப்பாக இருக்ககூடும். மேலும், தற்போது பறவைகளின் வலசை காலம் தொடங்கவுள்ளது தற்போது பள்ளிக்கரனை, பெரும்பாக்கம் போன்ற இடங்களில் எல்லாம் பறைவகள் வர தொடங்கி உள்ளன. மேலும், கடலுக்கும் நிலத்திற்கும், இடைய அமைந்திருக்கும் அலையாத்தி காடுகள் இயற்கை தந்த பரிசு. இந்த இயற்கை வளம் தற்போது மிகவும் பாதிப்படைய கூடும் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கடலாமைகளுக்கு ஆபத்தா? இது குறித்து ஆமைகள் தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், நமது சென்னை என்பது கிழக்கு கடற்கரை பகுதியை சார்ந்தவை இங்கு அதிக அளவில் வருவது ஆலிவ் ரிட்லி கடலாமைகள் தான். இந்த கடலாமைகள் கூடுக்கட்டி முட்டையிடும். இது ஜனவரி மாதம் முதல் ஏப்பரல் மாதம் வரை நடக்கும். சென்னையில் கடற்கரை பகுதியில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆமைகள் முட்டையிடும். தற்போது எண்ணூர் பகுதியில் படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகள், கோவலம் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து மீன்வர்கள் கூறுகையில், " நாங்கள் இது குறித்து என்ன கூறுவது என்று தெரியவில்லை. எங்களால் இந்த பகுதியில், கடல்தொழிலுக்கு செல்ல முடியவில்லை. நாங்களும், அரசுடன் இணைந்து எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. மீன்களும் மீன்வர்களும் மிக துயரத்துக்கு ஆளாகி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்"