ETV Bharat / state

அம்பேத்கரும் - காந்தியும்.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க கூடாதா? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

author img

By

Published : Aug 1, 2023, 9:58 AM IST

Updated : Aug 1, 2023, 2:43 PM IST

நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கரின் படங்களும், சிலைகளும் வைக்கக்கூடாதா? என்ற சர்ச்சைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்..

அம்பேத்கரும் - காந்தியும்.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க கூடாதா? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?
அம்பேத்கரும் - காந்தியும்.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க கூடாதா? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

சென்னை: அம்பேத்கரின் படங்களும் சிலைகளும் நீதிமன்ற வளாகங்களில் ஏன் வைக்க கூடாது? என்ற விவாதம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது. ஏன் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாதா? நீதிமன்றத்தின் அறிவிப்பு சரியா? விரிவாக பார்க்கலாம்.

சட்டமேதை அம்பேத்கர்: மத்திய பிரதேசத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர் 1922ம் ஆண்டு சட்டம் பயின்று லண்டனில் பாரிஸ்டராக பதிவு செய்தார். 1947ல் இந்தியா சுதந்திரமடைந்ததும், நேருவின் அமைச்சரவையில் முதல் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் எங்கெல்லாம் மறுக்கப்பட்டதோ? அங்கெல்லாம் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

சட்டரீதியாக அந்த உரிமைகளை பெற முடியாது என்ற நிலை வந்த போது தனது சட்ட அமைச்சர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர், நூலாசிரியர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், கல்வியாளர், சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர், தத்துவவாதி என பன்முக தன்மை கொண்டவராக செயல்பட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே நாயாகவும், பூனையாகவும் கேவலமாக நடத்தப்படும் போது இந்தியாவை தன்னுடைய தாய் நாடாக எங்கேயும் கூறமாட்டேன் என அறிவித்தார். போராட்டங்கள் மூலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை திடமாக நம்பிய அம்பேத்கர், அனைத்து மக்களுக்குமான சமமான பாதுகாப்பு சட்டரீதியாக மட்டுமே கிடைக்கும் என்பதை இந்திய அரசியலமைப்பின் மூலம் நிரூபித்தார்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி: குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இங்கிலாந்தில் சட்டம் பயின்று, தாயகம் திரும்பிய நிலையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் உரிமைக்காக தனது அகிம்சை வழி போராட்டத்தை துவங்கினார். ஆயுத போராட்டங்களால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என நம்பிய காந்தி, உண்ணாவிரத போராட்டங்களின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.

ஒத்துழையாமை இயக்கம், கதர் ஆடை போராட்டம், உப்பு சத்தியாகிரகம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை போன்றவற்றை அமைதி வழியில் வெற்றி கண்டார். காந்தி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர். அம்பேத்கரோ மறுக்கப்படும் உரிமைகளை கேட்டு பெற முடியாது. அதை சட்டரீதியாக மட்டுமே பெற முடியும் என்பதை நம்பினார். தேசத்தின் ஆகச்சிறந்த இரு தலைவர்களின் நோக்கமும் மக்களின் விடுதலை என்ற ஒன்றாகவே இருந்தது.

ஆனால், காந்தி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்களின் விடுதலைக்காகவும், அம்பேத்கரோ தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக சொந்த மக்களுக்கு எதிராக போராடினார். மக்களின் உரிமைக்காக போராடிய இரு தலைவர்களில் காந்தியின் படங்களை நீதிமன்றத்தில் வைக்கலாம் எனவும், அம்பேத்கரின் படங்களை வைக்க கூடாது எனவும் பதிவுத்துறை அறிவித்திருப்பது வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பதிவுத்துறையின் இந்த உத்தரவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் பேசியபோது, “நீதிமன்றங்களில் காந்தி, வள்ளுவர் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என சட்டரீதியாக எந்த உத்தரவும் இல்லை. தேசத்தின் தந்தை என்ற அடிப்படையில் காந்தியின் படங்கள் மரியாதை நிமித்தமாக நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர் சார்ந்த தலைவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவிக்கலாம். ஆனால், நீதியை வழங்கும் நீதிமன்றங்களில் சமூக தலைவர்களின் படத்தையோ? அரசியல் தலைவர்களின் படங்களையோ? வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதி வழங்கும் இடத்தில் தங்கள் புகைப்படம் இருப்பதை காந்தியோ? அம்பேத்கரோ? கூட விரும்ப மாட்டார்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் வைகை, “நீதிமன்றங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்க கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அம்பேத்கர் அரசியல் தலைவரோ? குறிப்பிட்ட அமைப்பின் தலைவரோ? இல்லை. தனது இறுதி காலம் வரை மக்களின் சமூக மாற்றத்திற்காக மட்டுமே போராடினார்.

1950ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதை இன்றும் நாம் சவாலாக பார்க்கிறோம். ஆதரவற்ற, பழங்குடியின மக்களுக்கு சட்டரீதியாக மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை அன்றே கணித்த தீர்க்கதரிசியாக அம்பேத்கர் இன்றும் பார்க்கப்படுகிறார்.

ஆட்சியும், காலங்களும் மாறினாலும், நீதிமன்றங்களின் புனித நூலாக இந்திய அரசியலைப்புக்குத் தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அம்பேத்கரின் புகைப்படத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது” என கருத்து தெரிவித்தார்.

சமூக தலைவர்களின் படங்களை வைக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்தை தாண்டி, மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதையும் படிங்க: ஆரணியில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Last Updated : Aug 1, 2023, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.