சென்னை: தாம்பரம் அடுத்த டி.டி.கே.வி நகர் அருகே உள்ள விளையாட்டு திடலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டியை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா ஆதரவாளர்கள் விளையாட்டு திடலின் நடுவே பந்தல் அமைத்து நடத்தினர்.
அப்போது மற்றொரு தரப்பினரானா அமைச்சர் தாமோ அன்பரசன் ஆதரவாளர்கள் சென்று பேனரை கொண்டு வந்து விளையாட்டு திடலில் வைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது சிலர் பேனரை அகற்ற முயன்றனர். இதனால் அமைச்சர் தா.மோ.அன்பரசு ஆதரவாளர்கள் மேடையை உடைத்து எறிந்ததால் ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பானது.
இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்த வந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோரை இரு தரப்பினரும் முற்றுகையிட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். பின்பு இருவரையும் காவல்துறையினர் பாதுகாப்புடன் கூட்டத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து தாம்பரம் உதவி காவல் ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தார்.
இதையும் படிங்க: வாட்ச் விலை ரூ.3.5 லட்சமா? - அண்ணாமலையின் பதில் என்ன?