ETV Bharat / state

உதவிப் பொறியாளர் பணி வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து! - A single judge order cancelled in Assistant Engineer case

உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாகும்போது தொலைதூர கல்வியில் முடித்தவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்னும் தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உதவிப் பொறியாளர் பணி வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து!

author img

By

Published : Jan 5, 2022, 10:30 AM IST

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் டிப்ளமோ முடித்து இளநிலை பொறியாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பி.இ.மெக்கானிக்கல் பயின்று முடித்ததால், காலி உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தங்களை நியமிக்க வேண்டுமென டான்ஜெட்கோவிடம் கோரிக்கை விடுத்தனர்.

சேலம் விநாயக மிஷன் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பெற்ற பி.இ, பட்டம் செல்லுபடியாகுமா? என மதிப்பீடு செய்ய வேண்டியிருந்ததாக கூறி, இந்த விவகாரத்தில் டான்ஜெட்கோ முடிவெடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னர் தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தனி நீதிபதி உத்தரவு ரத்து

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால், தங்களுக்கு உதவிப் பொறியாளர் பணி வழங்கக் கோரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாகும்போது தொலைதூர கல்வியில் முடித்தவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தற்போது இளநிலை பொறியாளர்களாக உள்ள 14 பொறியாளர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரடியாக பொறியியல் படிப்பை முடித்து டான்ஜெட்கோவில் வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும், தனி நீதிபதி உத்தரவுப்படி தொலைதூர கல்வியில் முடித்தவர்களுக்கு வேலை வழங்கினால், தங்களது பணி மூப்பு பாதிக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2009ஆம் ஆண்டிற்குள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018ஆம் ஆண்டில் இத்தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை பொறியாளர்களுக்கு, உதவிப் பொறியாளர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் ஏற்கனவே விநாயகா மிஷன் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நிகர்நிலை பல்கலைகழகங்கள் சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே செயல்படுவதாகவும், கல்விக்கும் தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உணர வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம்... தமிழ்நாட்டில் கல்லா கட்டும் வேலை!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.