சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.24) நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஜய், தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில், நம்ம போகிற பயணம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் நாம் போகிற பாதை சரியா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான் என்று ரஞ்சிதமே பாடலில் வருவது போல் முத்தம் கொடுத்தார்.
யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று இருந்தார். இப்போது யோகி பாபுவை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என ஆசை படுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம். எஸ்ஜே சூர்யா வந்து விட்டீர்கள், இன்னும் கொஞ்ச காலம் தான். எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் நடித்தது குறைவு தான். அவருடைய கனவு கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது என்றார்.
குட்டிக்கதை
ஒரு குட்டி பசங்க கதை தான். உறவுகளை பற்றிய படம் என்பதால் உறவுகளை பற்றிய குட்டி கதை சொல்கிறேன். அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஆயுதம், எதுக்காகவும் அதில் ஒன்று உறவுகள். மற்றொன்று
நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும்.
ரத்த தானம் செயலை நான் தொடங்க காரணம் ரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். ரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது.
6,000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் ரத்த தானம் செய்து உள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்கு தான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்றார்.
கேள்வி, பதில்:
தளபதிக்கு எது போதை?
ரசிகர்கள் தான்.
30 வருட பயணம் வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஷயம், பிரச்சனை?
பழகி பேச்சு பிரச்சனைகள் வருகிறது. எதிர்க்கிறார்கள் என்றால் அப்போ நாம் சரியான பாதையில் தான் போகிறோம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.
1990-களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். போக போக ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார். அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டி ஓடினேன். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும். அது தான் உங்களை உயர்த்தும். நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர் என்றார்.
ரசிகர்கள் உடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எனக்கு டிவிட் பண்ண தெரியாது. நான் என்னுடைய அட்மின் அழைக்கிறேன் என்று மேடையிலேயே செல்ஃபி எடுத்தார். ரஞ்சிதமே பாடலை விஜய் பாட ரசிகர்களும் கூட பாடினார்கள். இவ்வாறு வாரிசு இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு