ETV Bharat / state

Girl Death Note: 'தாயின் கருவறையும் கல்லறையும் தான் பாதுகாப்பானது' - தற்கொலை செய்த மாணவி உருக்கம்

Girl Death Note: பாலியல் தொல்லை காரணத்தால் 11ஆம் வகுப்பு படித்து வரும் அரசுப் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

author img

By

Published : Dec 19, 2021, 8:09 AM IST

Updated : Dec 20, 2021, 6:44 PM IST

சென்னை(Sexual Harassment News): மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

டிசம்பர் 18ஆம் தேதி மாணவியின் தந்தை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது தாயுடன் வீட்டில் இருந்து வந்தார்.

தாய் கடைக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்து பார்த்த போது, அறைக்குள் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதை உணர்ந்தார்.

கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவரது தாய், தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பாலியல் தொல்லையால் தற்கொலை முடிவு

இதுகுறித்து மாங்காடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த சில தினங்களாக அப்பெண் தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இவர் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறிப்பாக, அக்கடிதத்தில் ஆசிரியர், உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் எனவும்; பாதுகாப்பான இடம் என்றால் அது தாயின் கருவறையும் கல்லறையும் தான் என உருக்கமாக எழுதிவைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும், மாணவியின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா?

Last Updated : Dec 20, 2021, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.