ETV Bharat / state

பாலசந்தர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை; புத்தகக் கண்காட்சியில் சினிமா பிரியர்களைக் கவரும் 'ப்யூர் சினிமா' அரங்கு..

Chennai book fair 2024: சென்னை நத்தனத்தில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ப்யூர் சினிமா அரங்கு திரைப்படத் துறையில் ஆர்வம் நிறைந்த இளைஞர்களையும், புத்தகப் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ப்யூர் சினிமா பற்றிய செய்தித் தொகுப்பு
ப்யூர் சினிமா பற்றிய செய்தித் தொகுப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 10:46 PM IST

ப்யூர் சினிமா பற்றிய செய்தித் தொகுப்பு

சென்னை: 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு, ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த கண்காட்சியில் புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான படைப்புகளை எளிதாகப் பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சினிமா ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ப்யூர் சினிமா அரங்கு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இது குறித்து அரங்கின் நிர்வாகி செல்வமணி கூறுகையில், “தமிழ் ஸ்டூடியோ என்னும் இயக்கம் அருண் என்பவரால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. கிராமத்தில் இருந்து சினிமா ஆசையில் சென்னை வருபவர்களுக்கு எங்கு எப்படி சினிமா கற்றுக்கொள்வது என்று தெரியாது. அவர்களுக்காக பேசாமொழி என்னும் பதிப்பகம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே சினிமாவுக்கு என்று இயங்கி வரும் ஒரே ஒரு புத்தக அரங்கு தமிழகத்தில் ப்யூர் சினிமா மட்டும் தான். இந்த பதிப்பகத்தின் மூலம் கிட்டத்தட்ட 110 சினிமா தொடர்பான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளோம். சினிமா கற்றுக்கொள்ள நினைப்பவர்களும் சினிமா மீது ஆசை உள்ளவர்களும் இங்கு வந்து புத்தகங்கள் வாங்கிச் செல்கிறார்கள். முக்கியமாக லோகேஷ் கனகராஜ் வருகைக்குப் பிறகு கடந்த ஆண்டு அவரது மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் திரைக்கதை புத்தகங்கள் நிறைய வாங்கிச் செல்கிறார்கள். மேலும் கோலி சோடா, விடுதலை, வடசென்னை, சித்தா படங்களின் திரைக்கதை புத்தகங்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள்.

என்னதான் நிறையத் தொழில்நுட்பங்கள் வந்தாலும் சினிமாவின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளப் புத்தகங்கள் தான் உதவுகின்றன. அதனால் புத்தகங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது அதுவும் நன்றாக வரவேற்பு பெற்று வருகிறது. இப்போதுள்ள இளைஞர்கள் சினிமா மீது ஆர்வம் கொண்டு வரும் அவர்கள் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி இலக்கியங்களையும் படித்தால்தான் நல்ல படைப்புகளை வழங்க முடியும். இந்த ப்யூர் சினிமாவின் வளர்ச்சிக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் உதவி செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

வாசகர் மதிவானன் கூறும்போது, “குழந்தைகள் இடம் புத்தகங்கள் போய்ச் சேரவேண்டும் என்றால் அவர்களைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதைப் பார்த்துக் கொண்டாலே அவர்கள் படிக்கத் தொடங்கி விடுவார்கள். நூலகங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் இதன் மூலம் அவர்களுக்கும் வாசிப்பு பழக்கம் ஏற்படும். இப்போது வரையும் பொதுமக்களுக்கு சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே அதனைப் பற்றி உள்ளே சென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்குக் குறைவுதான்” என்றார்.

வாசகர் ஷிவானி கூறும்போது, “எனக்குச் சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆசை. அதனை எப்படி எடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆர்வம். திரைக்கதை குறித்தும் அதன் வடிவங்கள் குறித்தும் அறிந்து கொள்ள இங்குப் புத்தகங்கள் வாங்க வந்துள்ளேன் என்றார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தான் பிரச்சனை? பயணிகள் தரப்பில் கூறுவது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.