ETV Bharat / state

அங்கன்வாடிகளில் LKG, UKG மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல்: காரணம் என்ன?

author img

By

Published : Apr 14, 2023, 1:49 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

LKG, UKG
அங்கன்வாடி LKG, UKG மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல்

சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டனர். பின்னர் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வந்தது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க மான்டசரி பயிற்சி முடித்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த தற்காலிகமாக உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர். ஆகையால் தற்போதைய நிலையில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தற்போது எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது. பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அது குறித்த தெளிவான அறிவிப்பும் பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து வராததால் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்த குழப்பம் தற்போது பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Thiruneer Annamalaiyar: திருநீர் அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.