ETV Bharat / state

நூதன முறையில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று மோசடி ...பாதிக்கப்பட்டவர்கள் புகார்.. - taking loans through an online app

சென்னையில் நூதன முறையில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று மோசடி செய்த நபர்

author img

By

Published : Nov 8, 2022, 9:46 AM IST

சென்னை: கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சுமார் 20க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”மோசடி செய்த ராஜேஷ் என்பவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். மருந்து விற்பனை பிரதிநிதியாக சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு விதமான கதையை கூறி இலட்சக்கணக்கில் பணத்தை கடனாக கேட்டார்.

குறிப்பாக பெற்றோருக்கு மருத்துவச் செலவு அவசரமாக தேவைப்படுகிறது எனவும், நிலத்தை விற்பனை செய்த பணம் வங்கியில் வருமான வரி பிரச்சனை காரணமாக மாட்டிக் கொண்டுள்ளதாக கூறியும் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் முதல், அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.

கடனாக பணத்தை வாங்குவதற்கு காலில் கூட விழுந்து நம்பும்படி நடித்து, பணத்தை வாங்கிச் சென்றார். ராஜேஷ் தன்னோடு பழகிய மருந்து விற்பனை பிரதிநிதிகளை மட்டும் குறி வைத்து இதுபோன்று கடன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த பேட்டி

ராஜேஷும், மிகப் பிரபலமான தனியார் மருந்து நிறுவனத்தில் சுமார் 70,000 க்கு மேல் சம்பளமும், வசதியாக இருக்கும் நபர் என்பதால், மருத்துவத் தேவைக்காகவும், அவசர தேவைக்காகவும் பணம் கேட்கும் பொழுது உதவும் எண்ணத்தில் நம்பி கடனாக பணம் கொடுத்து ஏமாந்துள்ளோம்.

கடனாக கேட்கும் நபர்கள் கையில் பணம் இல்லை என தெரிவிக்கும் பொழுது, தனியார் ஆன்லைன் கடன் செயலி மூலம் தங்கள் செல்போனை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கடன் வாங்கி, அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டார். வாங்கிய கடனை குறுகிய காலத்திற்குள் திருப்பித் தருவதாகவும் வாக்குறுதி அளித்ததால், அதனை நம்பி தாங்கள் ஆன்லைன் கடன் செயலியை டவுன்லோடு செய்து பணத்தை தங்கள் ஆவணங்கள் மூலம் கடனாக வாங்கி கொடுத்தோம்.

இவ்வாறு சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி தலைமறைவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். ராஜேஷ் தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி கடன் செயலியில் வாங்கிய கடனுக்கு முதல் தவணை செலுத்தும் தேதி வந்த போது, ராஜேஷ் அந்த பணத்தை கட்டாமல் ஏமாற்றியதன் மூலம் தாங்கள் மோசடிக்கு உள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

இது தொடர்பாக ராஜேஷின் வீட்டில் அவரது தாய் உள்ளிட்டோரிடம் கேட்கும் பொழுது அலட்சியமாக பதில் கூறி தங்களை ஏமாற்றுவதாகவும் புகார் அளித்துள்ளனர். குடும்பத்தினரிடம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை கட்டி சூதாடி ராஜேஷ் பணத்தை இழந்துள்ளதாகவும், தாங்கள் ராஜேஷை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என முறையாக பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜேஷ் உடனடியாக பணத்தை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில், ஆன்லைன் கடன் செயலியில் வாங்கிய பணத்திற்கு அதிக வட்டிக்கு பணத்தை செலுத்த வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். சுமார் 33 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும், மாதாமாதம் தவணைகள் செலுத்தினாலும், தேவையில்லாமல் அபராதங்களை விதித்து கடன் செயலி நிறுவனம் தங்களிடமிருந்து பணத்தை பறிக்கிறது.

பாதிக்கப்பட்ட சிலர் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில், அந்த தனியார் கடன் செயலி நிறுவனம் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆபாசமாக அனுப்ப நேரிடும் என எச்சரிகின்றனர்.

எனவே நூதன முறையில் தங்களை ஆன்லைன் கடன் செயலியின் கடனாளியாக மாற்றிவிட்டு, பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான ராஜேஷை உடனடியாக கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தனியாக செல்வோரிடம் நூத முறையில் வழிப்பறி.. தி.மலை கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.