சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே. மடம் சாலையில் சீனிவாசன் என்பவர் ஆவின் பாலாகம் நடத்தி வருகிறார்.
கடந்த மே 7ஆம் தேதி கடையை பூட்டி விட்டு சென்ற சீனிவாசன் அடுத்த நாள் 8ஆம் தேதி கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய், பிஸ்கட், லஸ்ஸி, நெய் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சீனிவாசன் சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடையில் கைவரிசை காட்டிய ஆவடியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.