ETV Bharat / state

விளையாட்டால் வந்த வில்லங்கம்; ஜிபே நம்பரால் மாட்டிய ஜோக்கர் - ஆவடி

LUDO விளையாட்டில் பழகி, வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து 50 லட்சம் பணம் கேட்டு சிறுமி மற்றும் தாயை மிரட்டிய பட்டதாரி இளைஞர் ஆவடி மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டால் வந்த வில்லங்கம்; ஜிபே நம்பரால் மாட்டிய ஜோக்கர்

author img

By

Published : Jul 12, 2022, 1:10 PM IST

திருவள்ளூர்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். இவரது மகளுக்கு செல்போன் விளையாட்டான LUDOவில் திருவெற்றியூரை சேர்ந்த EEE டிப்ளமோ பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவர் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.

பின்னர் இவர்களிடையே நட்பு வளர்ந்து செல்போன் எண் பரிமாறி TELEGRAM, HELLO YO போன்ற ஆப் வழியாக பேசி வந்துள்ளனர். இதில் இருவரும் நெருங்கி பழக துவங்கியுள்ளனர். பிறகு விக்னேஷ் மற்றும் சிறுமி ஆபாசமாக உரையாடல் மேற்கொண்டுள்ளனர். நாளடைவில் விக்னேஷ் சிறுமியை வீடியோ காலில் வர வற்புறுத்தி உள்ளார்.

இவ்வாறு வீடியோ காலில் சிறுமியை ஜோக்கர் விக்னேஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளளான். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட விக்னேஷ் சிறுமியின் வீட்டிற்கு நேரில் வந்து ஏற்கனவே ரெகார்ட் செய்து வைத்திருந்த வீடியோவை காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என பயமுறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.

இதன்பின்னர் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை சிறுமி கூறி அழுது இருக்கிறாள். மேலும் சிறுமியை மிரட்டி குறுசெய்தி அனுப்பியிருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக பெற்றோர் விக்னேஷை தொடர்பு கொண்டபோது எனக்கு ஒரு வீடியோவிற்கு 25 ஆயிரம் விதம் 50 லட்சம் பணம் தர வேண்டும்.

பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் நான் செய்வேன். இல்லையென்றால் உனது மகள் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி தைரியமாக தனது GPAY எண்ணை அனுப்பி பணம் கேட்டு உள்ளான். மேலும் இதுகுறித்து காவல் துறையினரிடமோ வேறு யாரிடமோ கூறினால் ஆபாச உரையாடல்களை உங்கள் பகுதியில் ஒட்டி காண்பித்து அவமான படுத்துவேன் என மிரட்டியுள்ளான்.

இது பற்றி சிறுமியின் தாய் ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளமேடு பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஷை கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் விக்னேஷ் மீது ஏற்கனவே PLANET ROMEO எனும் ஓரின சேர்க்கை ஆப் மூலமாக பழகி நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் சந்திக்க வரும் ஆண்களை தாக்கி பணம், செல்போன் போன்றவை பறித்தது தொடர்பாக சாத்தாங்காடு காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தது தெரியவந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த விக்னேஷ் செங்கல்பட்டு சென்று வீடு வாடகை எடுத்து தங்கி ஆப் மூலம் மீண்டும் குற்ற செயலியில் ஈடுபட ஆரம்பித்து உள்ளான். இதனையடுத்து திருமுல்லைவாயல் தனிப்படை போலீசார் விக்னேசை ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்பின் பழக்கம் இல்லாத நபர்களிடம் பழகும் சிறுமிகள்,பெண்கள் இதுபோன்ற நபர்களிடம் சிக்கி பரிதவிப்பது தொடர்கதையாகி வருவதால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் எனவும்,நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டிக்க வேண்டும் மேலும் தேவையற்ற இணையதளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: ஃப்ரீ ஃபயர் கேமில் பழக்கம்... மதுரை சிறுமியை மகாராஷ்டிரா கூட்டிச் சென்ற வடமாநில இளைஞர் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.