ETV Bharat / state

பல்லாவரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு! - chennai crime news

சென்னை: பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A dead body caught at Pallavaram Military Cricket Ground
author img

By

Published : Nov 2, 2019, 8:49 PM IST

சென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே உள்ள சாலையில் நேற்றிரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் ஆண் உடல் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்

முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்தன்(45) என்பது தெரியவந்துள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஆனந்தன், சில நாட்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் எனவும், சில தினங்களுக்கு முன்பு உறவினர்களிடம் திருவண்ணாமலை செல்வதாகக் கூறிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவர் எப்படி இங்கு வந்தார், யாரேனும் இவரை கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

கொலை செய்யப்பட்டு இறந்த ஆனந்தன்
சடலமாக மீட்கப்பட்ட ஆனந்தன்

கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து அருகிலுள்ள மதுபானக் கடையில் குடித்துவிட்டு இரவில் ராணுவ மைதான புதர் பகுதியில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ஆனந்தன் இரவில் மது குடிக்க வந்து அங்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையால் 2மாத பெண் குழந்தையை கொலை செய்த தந்தை!

Intro:பல்லாவரம் இராணுவ மைதானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்புBody:பல்லாவரம் இராணுவ மைதானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

பல்லாவரம் வெட்டர் லைன் பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் மதுபானகடையால் அதிகரிக்கும் குற்றசம்பவங்கள்

சென்னையை அடுத்த பல்லாவரம் வெட்டர்லைன் மைதானம் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் முகத்தில் பயங்கர காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (45) என்பது தெரிய வந்தது.

சில நாட்களாக ஜாபர்கான் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த ஆனந்தன் திருவண்ணாமலை செல்வதாக கூறி சென்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்

இந்நிலையில் இவர் எப்படி இங்கு வந்தார். யாரேனும் இவரை கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெறும் வருகிறது அங்கு குடித்து விட்டு இரவில் ராணுவ மைதான புதர் பகுதியில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில்.
ஆனந்தன் கொலை செய்யப்பட்டு கிடந்த்து பொதுமக்கள். மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆனந்தன் இரவில் மது குடிக்க வந்து அங்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.