ETV Bharat / state

திருநங்கைகள் மூலம் குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்! - புது வண்ணாரப்பேட்டை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்காக, இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (செப்.24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

author img

By

Published : Sep 25, 2020, 4:57 AM IST

சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (செப்.24) நடைபெற்றது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையத்திற்குட்பட்ட காவலர்கள் சமூகநல கூடத்தில் வட சென்னை வண்ணாரப்பேட்டை சரக இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.24) நடைபெற்றது.

இதில், சுனாமி குடியிருப்பு பகுதியிலுள்ள திருநங்கைகள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இப்பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுப்பது, முன்கூட்டியே தெரியப்படும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவது, திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர், பேசிய இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, “ இளைஞர்கள் படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து, படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக அறிகுறிகள் தெரிந்தால் காவல் துறையின் ரகசிய எண்ணிற்கு பொதுமக்கள் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

வட சென்னையில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக அதிகப்படியான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். காவல் துறையினர் பற்றாக் குறைகளை தடுப்பதற்காக வடசென்னை பகுதிக்கு கூடுதலாக நூறு காவல் துறையினர், நியமிக்கப்படவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.