ETV Bharat / state

"கொலை செய்யப்பட்ட கோகுல் தாயாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு"- பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது - Tamil Nadu Chief Minister s General Relief Fund

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுலின் தாயாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

"கொலை செய்யப்பட்ட கோகுல் தாயாரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு"- பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது

author img

By

Published : Feb 11, 2023, 11:06 PM IST

சென்னை: தாம்பரத்தை சேர்ந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனின் தாயார் பிரியா தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டரை லட்சம் சமூக பாதுகாப்பு துறை இழப்பீடு நிலையில் இருந்து ஏழரை லட்சம் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார் மற்றும் இவர்களுக்கு குடியிருக்க வீடு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதனபடி, இன்று (பிப்.11) காலை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறுவனின் தாயாரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு வீடுக்கான ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை வழங்கினார்.

நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்ட சிறுவனின் தாயார் பிரியா, நிவாரண உதவி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி எனத் தெரிவித்தார். தன் மகன் இறப்பில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சினிமா பாணியில் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்; தம்பிக்காக ஆஜரான அண்ணன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.