ETV Bharat / state

ஜூடோ பயிற்சி சென்ற மாணவர் சடலமாக மீட்பு... பிட் அடித்து மாட்டியதால் தற்கொலையா? - ஒரிஜினல் சுந்தரி அக்கா ஹோட்டல்

ஜூடோ பயிற்சிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளைஞர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Jan 26, 2023, 4:13 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி கெனால் தெருவைச் சேர்ந்தவர், செந்தில் குமார். இவர் பாரதி சாலையில் பழைய புத்தகம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

லோகேஷ் படிக்கும் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பிட் அடித்த லோகேஷை கல்லூரி பறக்கும் படையினர் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி, தேர்வில் முறைகேடு செய்ததாக லோகேஷை அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது

இதனால் மாணவர் லோகேஷ் அச்சமடைந்ததாகத் தெரிகிறது. மன உளைச்சல் ஏற்பட்ட லோகேஷூக்கு அவரது கல்லூரி நண்பர்கள் ஆறுதல் கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த லோகேஷ், சோகமாக இருந்ததுடன் கல்லூரியில் நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவிக்காமல், ஜூடோ பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

வெளியே சென்ற லோகேஷ் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் லோகேஷ் கிடைக்காததால் கலக்கம் அடைந்த பெற்றோர் உடனே பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் பட்டினப்பாக்கம் கடற்கரையோரம் சடலமாக கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக இருப்பது லோகேஷ் தான் என உறுதி செய்தனர்.

லோகேஷின் சடலத்தைப் பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்டதால் மாணவர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.