ETV Bharat / state

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடப்பகுதி வெளியீடு - 9th class reduced syllabus portion

சென்னை: நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 25, 2021, 5:49 PM IST

கரோனா பொது முடக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிற வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையிலும், வல்லுநர் குழுவின் ஆலோசனையின்படி பாடத் திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் ஒவ்வொரு பிரிவிலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து தற்பொழுது 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.