ETV Bharat / state

பூட்டிய வீட்டில் கைவரிசை ... 98 சவரன் நகைகள் கொள்ளை..! - நகை கொள்ளை

தாம்பரம் அருகே பூட்டிய வீட்டில் 98 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

98 Sawaran jewels theft  jewels stolen  jewels stolen near Tambaram  chennai news  chennai latest news  பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவசம்  98 சவரன் நகைகள் கொள்ளை  தாம்பரத்தில் 98 சவரன் நகைகள் கொள்ளை  நகை கொள்ளை  சென்னை செய்திகள்
98 சவரன் நகைகள் கொள்ளை
author img

By

Published : Sep 12, 2022, 11:16 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (36). இவர் தாம்பரம் பகுதியில் தனியார் டேக்ஸ் கன்சல்டன்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சனிக்கிழமை (செப் 10) தன் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்க்க தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தென்காசிக்கு சென்றுள்ளார். பின் நேற்று (செப் 11) வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 98 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை மாதிரிகளை சேகரித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூ.29,500 திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.