தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக நேற்று (மே.06) முதல் வருகிற 20ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே காலை ஆறு மணி முதல் நண்பகல் 12 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மதுபான கடைகளும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று (மே.06) நான்கு மணி நேரத்தில் மதுக்கடைகளில் 81 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.