ETV Bharat / state

கரோனா தொற்று: தமிழ்நாட்டில் 80 காவலர்கள் உயிரிழப்பு!

author img

By

Published : May 20, 2021, 2:31 PM IST

கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 80 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 80  காவலர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் 80 காவலர்கள் உயிரிழப்பு

சென்னை: கரோனா தொற்றின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை உருக்குலைத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் காவல்துறையினர் கரோனா நோய்த் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 289 காவல்துறையினர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 984 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போது வரை 80 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொருட்டு, தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக காவல்துறையினருக்குத் தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவரும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல 50 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து ஆயிரத்து 137 காவல்துறையினரும், இரண்டு தடுப்பூசியையும் 69 ஆயிரத்து 477 பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பணியின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையில் ஏற்படும் இழப்பும், பாதிப்பும் அவர்களின் குடும்பத்தாரோடு மட்டும் நின்றுவிடாமல் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.