கரோனா வைரஸின் தாக்கம் உலகையை அச்சுறுத்திவருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
தமிழ்நாட்டிலும் கரோனா தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 76 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்படோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை- 46 பேர்
- ராயபுரம் - 116 பேர்
- திரு.வி.க. நகர் - 42 பேர்
- தேனாம்பேட்டை - 42 பேர்
- திருவொற்றியூர் - 12 பேர்
- அடையார் - 7 பேர்
- பெருங்குடி - 8 பேர்
- ஆலந்தூர் - 7 பேர்
- வளசரவாக்கம் - 9 பேர்
- சோழிங்கநல்லூர் - 2 பேர்
- அண்ணாநகர் - 27 பேர்
- கோடம்பாக்கம் - 35 பேர்
மேலும், 86 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகரில் தலா ஒருவர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதித்தவர்கள் விவரங்களை வெளியிடக் கோரிய வழக்கு தள்ளுபடி