ETV Bharat / state

44th Chess Olympiad: வயிற்றில் 8 மாத குழந்தை...களம் இறங்கும் இந்திய வீராங்கனை..!

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பெண்கள் முதல் பிரிவில் 8 மாத கர்ப்பிணி இடம்பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

44th Chess Olympaid  Chess Olympaid  8 month pregnant lady  8 month pregnant lady take part in 44th chess olympiad  8 மாத குழந்தை கலம் இரங்கும் இந்திய வீராங்கனை  செஸ் ஒலிம்பியாட்  44ஆவது செஸ் ஒலிம்பியாட்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி
இந்திய வீராங்கனை
author img

By

Published : Jul 28, 2022, 2:21 PM IST

Updated : Jul 28, 2022, 3:41 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது. மொத்தம் 30 வீரர், வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா முதல் அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

8 மாத கர்ப்பிணி: இந்த நிலையில் பெண்கள் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஹரிகா 8 மாத கர்ப்பிணியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், குண்டூரை சார்ந்தவர் ஹரிகா (31 வயது) , செஸ் மீதான ஆர்வம் காரணமாக 6 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார்.

இவர் தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டமும், 10-வது வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார். மேலும் ஹரிக்கா தன்னுடைய 12 வயதில் பெண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று ஆசியாவில் இளம் வயதில் பெண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

44th Chess Olympaid  Chess Olympaid  8 month pregnant lady  8 month pregnant lady take part in 44th chess olympiad  8 மாத குழந்தை கலம் இரங்கும் இந்திய வீராங்கனை  செஸ் ஒலிம்பியாட்  44ஆவது செஸ் ஒலிம்பியாட்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி
களம் இறங்கும் இந்திய வீராங்கனை

அதுமட்டுமின்றி இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இரண்டாவது பெண் என்ற சாதனையையும் படைத்தார். இந்தியாவில் ஹரிகாவிற்கு பிறகு எந்த ஒரு பெண் செஸ் வீரரும் தற்போது வரை கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறவில்லை.

வெற்றிகள்: செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. அதை தொடர்ந்து 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2004ஆம் ஆண்டு மூலம் இந்தியாவிற்காக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று வரும் ஹரிகா இந்த முறை வெற்றிக்கான கனவோடு தன்னுடைய குழந்தையையும் சுமந்து விளையாட உள்ளார், தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்காக மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

8 மாத கர்ப்பிணி

நான் செஸ் வீராங்கனை: இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் உள்ளது, அதுமட்டுமின்றி தனி மருத்துவக்குழு என சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

மேலும் ஹரிகா குறித்து பேசிய இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், " ஹரிகா இப்போட்டிக்காக கொடுத்த அர்ப்பணிப்பின் மிகப்பெரியது. ஹரிகா- வால் இந்தியா பெருமை கொள்ளப் போகிறது" என தெரிவித்தார்.

பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற வீரர்

இதை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக பேசிய கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, “ஒருவேளை நான் கர்ப்பிணிப் பெண் என்பதனால் என்னை சிறப்பாக பார்க்கிறார்கள், நான் அப்படி ஒன்றும் நினைத்துக் கொள்ளவில்லை. நான் செஸ் வீராங்கனை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்

Last Updated : Jul 28, 2022, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.