சென்னை: முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை எட்டு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
முதலாவது முகாமில் 28.91 லட்சம் பேரும், இரண்டாவது முகாமில் 16.43 லட்சம் பேரும், மூன்றாவது முகாமில் 25.04 லட்சம் பேரும், நான்காவது முகாமில் 17.04 லட்சம் பேரும், ஐந்தாவது முகாமில் 22.85 லட்சம் பேரும், ஆறாவது முகாமில் 23.27 லட்சம் பேரும், ஏழாவது முகாமில் 17.20 லட்சம் பேரும், எட்டாவது முகாமில் 16.40 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று நடைபெற்ற ஒன்பதாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 8,36,796 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 3,36,468 பேரும் இரண்டாவது தவணையாக 5,00,328 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடியாக கள ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை - 13 பேரிடம் விசாரணை