இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 52 பரிசோதனை மையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 241 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 13,413 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 771 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் இதுவரை 4,829 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 516 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 59 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் இல்லம் நோக்கி புறப்பட்ட 5 சிறுவர்கள்!